நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 21 தொகுதிகளில் போட்டி

மலாக்கா:

அடுத்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி மொத்தமுள்ள 28 இடங்களில் 21 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.

முன்னாள் முதலமைச்சர் அட்லி ஜொஹாரி புக்கிட் கட்டில் தொகுதியைப் பாதுகாக்கிறார்.

நம்பிக்கை கூட்டணி தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான அஸ்மான் அபிடின், பாயா ரம்புட் தொகுதியிலும், ஜினி லிம் மாச்சாப் ஜெயாவில் போட்டியிடுவார்.

மற்ற வேட்பாளர்களில் கெர்க் சீ யீ, ஆயர் குரோ தொகுதியில் போட்டியிடுவார்.

பெங்காலான் பத்துவில் ஜேசன் டிசே-சி நாதன், கிளெபாங்கில் ஃபர்சானா ஹயானி ஆகியோர் அடங்குவர்.

இதில் ஜசெகவின் ஜெகசீலன் காடேக் தொகுதியிலும் கெஅடிலானின் தினேஸ் அசாஹான் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

பெர்சத்து கட்சியுடன் ஒரு தேர்தல் உடன்பாடு ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், பெம்பான் உட்பட ஏழு தொகுதிகளில் நம்பிக்கை கூட்டணி போட்டியிடவில்லை என தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset