செய்திகள் மலேசியா
பினாங்கு பாயா தெருபோங் நிலச்சரிவு: மருத்துவர் உயிருடன் புதைந்தார்
ஜார்ஜ்டவுன்:
பாயா தெருபோங்கில் உள்ள தாமான் ஸ்ரீ ரம்பாயில், 73 வயதான மருத்துவரின் வீட்டை நிலச்சரிவு தாக்கியதைத் தொடர்ந்து, இன்று காலை அவரது உடல் இடிபாடுகள், சரிந்த கான்கிரீட் தூண்களின் குவியலிலிருந்து மீட்கப்பட்டது.
காலை 8.36 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரான டாக்டர் வோங் கார் லின், லெபோ ரம்பாய் 13இல் உள்ள அவரது வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்டார்.
பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ்,
காலை 11.20 மணிக்கு மீட்புப் பணியாளர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி உடலை மீட்கும் பணியில் கடுமையாக ஈடுபட்டிருந்ததாகக் கூறினார்.
கடுமையான காயங்கள் காரணமாக, உடலை மீட்கும் பணி தொடங்குவதற்கு முன்பே, சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்களால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:13 pm
நான் இன்னும் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை: மசீசவிடம் ஜாஹித் தெரிவித்தார்.
October 25, 2026, 10:42 am
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாராவில் ரவுஃப் தற்காக்கிறார், மெர்லிமாவு தொகுதியில் அக்மால் போட்டியிடுகிறார்
October 25, 2026, 10:10 am
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 21 தொகுதிகளில் போட்டி
October 25, 2026, 8:24 am
மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் காலமானார்
October 24, 2026, 10:47 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: காடேக்கில் நடராஜா போட்டி
October 24, 2026, 7:59 pm
