செய்திகள் மலேசியா
பாலிடெக்னிக் மாணவி கழுத்து நெரித்து கொலை: பொறாமை காரணம் என போலிஸ் விசாரணை
குவாந்தான்:
உயர்க்கல்விக்கூட மாணவி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவும் பொருட்டு போலிஸ் மூன்று பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் கொலை வழக்காக இந்த சம்பவம் வகைப்படுத்துள்ளது. வழக்கின் விசாரணைக்கு உதவ பாதிக்கப்பட்டவரின் இதர வீட்டு தோழரை போலிஸ் அழைத்துள்ளதாக குவாந்தான் மாவட்ட போலிஸ் தலைவர் அஷாரி அபு சாமா கூறினார்.
முன்னதாக, அதிகாலை 4.32 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் காதலரிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதன் பிறகு 19 வயதான சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா பாலிடெக்னிக் மாணவர், அந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள வாடகை அறையில் படுக்கையில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இதையடுத்து, சம்பவ இடத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணைக்காக, சந்தேக நபர் அடுத்த திங்கட்கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:13 pm
நான் இன்னும் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை: மசீசவிடம் ஜாஹித் தெரிவித்தார்.
October 25, 2026, 4:11 pm
பினாங்கு பாயா தெருபோங் நிலச்சரிவு: மருத்துவர் உயிருடன் புதைந்தார்
October 25, 2026, 10:42 am
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாராவில் ரவுஃப் தற்காக்கிறார், மெர்லிமாவு தொகுதியில் அக்மால் போட்டியிடுகிறார்
October 25, 2026, 10:10 am
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 21 தொகுதிகளில் போட்டி
October 25, 2026, 8:24 am
மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் காலமானார்
October 24, 2026, 10:47 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: காடேக்கில் நடராஜா போட்டி
October 24, 2026, 7:59 pm
