செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
மதுராந்தகம்:
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பகுதி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ல் தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத்(அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உட்பட 27 பேர் களத்தில் உள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா(தவெக), சுகன்யா(திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (சிபிஐ), கார்த்திகா(நாதக) உட்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.

தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தலா 2 நாட்கள் பிரச்சாரம் செய்தார். திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியும் பிரச்சாரம் செய்தனர்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சிகளின் மாநில நிர்வாகிகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அக்டோபர் 4-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இரு தொகுதிகள் முழுவதும் துணை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
