நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் சந்திக்கிறார்: சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிப்பாரா?

சென்னை:

தமிழ்நாடு ஆளுநராக முதல் முறையாக தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை (நவ. 13 ) சந்திக்க இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையன்று மட்டும் 8 பேர் கொலை செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக சிறைக்கைதிகள் தப்பிச்சென்றது போன்ற பிரச்சினைகளால் பெரும் பரபரப்பான சூழலில் நிலவி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தான அறிக்கை கேட்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் ஆர்லேகரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

தலைநகர் தில்லியில் நாளை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அர்லேகர் நாளை மறுநாள் (நவ. 14) கலந்துகொள்கிறார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் நவ. 15 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset