செய்திகள் தமிழ் தொடர்புகள்
"சமகாலத் தமிழில் சிறுபான்மையினர்" எனும் கருப்பொருளில் சென்னைப் பல்கலைக்கழக இஸ்லாமிய இயல் மையம், அரபு, பாரசீகம், உருதுத் துறைகள் இணைந்து ஒருங்கிணைத்த இருநாள் கருத்தரங்கம்
சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய இயல் மையம், அரபு, பாரசீகம், உருதுத் துறைகள் இணைந்து ஒருங்கிணைத்த இருநாள் உரையாடல் அரங்கம் நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வைச் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. ஜி. எம். அக்பர் அலி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையுரையாற்றினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் மையக் கருத்துரையாற்றினார்.
முனைவர் வாணி அறிவாளன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் பி. கே. அப்துல் ரஹிமான் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் அ. ஜாகிர் ஹுசைன் நோக்கவுரை வழங்கினார். பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தொடக்க விழாவில் மணலி அப்துல் காதர் தொகுத்த "கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்" என்ற நூலும், டாக்டர் ஸைபுத்தீன் எழுதிய, டாக்டர் சாத் பிலாலி மொழிபெயர்த்த "சூஃபித்துவம்: தரீக்காக்களின் சிந்தனைகளும் போராட்டங்களும்" என்ற நூலும் வெளியிடப்பட்டன.
நவீன இலக்கியப் பொதுவெளியும் சிறுபான்மையினரும், கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, பெண் எழுத்து, நவீன எழுத்தில் சூஃபி மொழி ஆகிய தலைப்புகளில் ஏழு அமர்வுகள் நடைபெற்றன.
நிறைவு விழாவில் பேராசிரியர் சே. மு. முஹம்மது அலி நிறைவுரையாற்றினார். முனைவர் நிர்மலர் செல்வி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மிகவும் காத்திரமான உரைகளை வழங்கினர்.
"சமகாலத் தமிழில் சிறுபான்மையினர்" என்ற பொருண்மையில், பொதுவெளியில், இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் அ ஜாகிர் ஹுசைன், பேராசிரியர் பி. கே. அப்துல் ரஹிமான் ஆகியோர் இவ்விருநாள் நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 1:54 pm
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்
November 6, 2026, 11:57 am
குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன
November 5, 2026, 9:31 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
November 4, 2026, 10:59 am
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது
October 30, 2026, 11:13 pm
