செய்திகள் தமிழ் தொடர்புகள்
குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன
சிவகாசி:
பல்துலக்கும் பிரஷ், பல்துலக்கும் பேஸ்ட், இந்து மதக் கடவுள்கள் கையில் தாங்கியிருக்கும் சூலாயுதம், தமிழா்களின் பாம்பரிய விளையாட்டு உபகரணங்களில் ஒன்றான பகடைக்காய், லவ்போ்ட்ஸ், தேங்காய் போன்ற வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
இவைத் தவிர, குழந்தைகளைக் கவரும் வகையில் கரடி, சிங்கம், பூனைக்குட்டி வடிவிலான பட்டாசுகள், சாக்லைட் வடிவிலான பட்டாசுகள், சிறிய விமானம் போன்ற பட்டாசுகள், போக்குவரத்து விதிகளைப் புரிந்து கொள்ளத் செய்யும் நோக்கில் மஞ்சள், பச்சை, சிகப்பு என அடுத்தடுத்து வண்ணங்களில் ஒளிரும் பட்டாசுகள் என பல பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக வந்துள்ளன.
பந்தய காா் வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசின் திரியில் தீயைப்பற்ற வைத்ததும், அந்தக் காா் தீப்பொறி பறக்க சுற்றி வருகிறது. பின்னா் இந்தக் காரை சிறுவா்கள் விளையாட வைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இந்தப் பட்டாசு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கமான லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கெட், கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, பென்சில், வானில் சென்று ஒளிசிந்தும் பேன்சிரக பட்டாசுகள் என பல வகையான பட்டாசுகளும் விற்பனையில் உள்ளன.
பேன்சி ரக பட்டாசுகள் அனைத்துக்கும் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடித்தால் நிச்சயம் இந்தப் பட்டாசுகள் மகிழ்ச்சியையே அளிக்கும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 1:54 pm
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்
November 5, 2026, 9:31 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
November 4, 2026, 10:59 am
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது
October 30, 2026, 11:13 pm
தமிழகத்தில் தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு: விற்பனை தொடங்கியது
October 30, 2026, 10:41 pm
