செய்திகள் மலேசியா
ஏகேபிஎஸ் இயக்குநர் வழக்கு: விசாரணை ஆவணங்கள் நாளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்
கோலாலம்பூர்:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் (ஏகேபிஎஸ்) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹாய்லி முகமது ஜைன் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆவணம், நாளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
இந்த விசாரணை ஆவணம் மேலதிக ஆய்வு, ஆலோசனை, அறிவுறுத்தல்களுக்காக அனுப்பப்படும் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 145(3) பிரிவின் விதிகளுக்கு இணங்க, இந்த விசாரணை ஆவணம் மேலதிக ஆய்வு, ஆலோசனை அறிவுறுத்தல்களுக்காக அக்டோபர் 6 அன்று சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
இதுவரை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், ஏகேபிஎஸ் அதிகாரிகள், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) துணைக்காவல் படையினர், பயணப் பெட்டி கையாளும் அமைப்புப் பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், சுயாதீன சாட்சிகள் என மொத்தம் 25 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 11:03 pm
ஊத்தான் மெலிந்தாங் ரெங்கநாதன் தோட்ட நில போராட்டம்: 35 ஆண்டுகளாக தீராத பிரச்சினை
October 5, 2026, 11:02 pm
எப்ஏஎம் நேர்மை குழுவின் துணைத் தலைவர் நியமனத்தை முகமது சுஹாய்லி நிராகரித்தார்
October 5, 2026, 5:37 pm
நீதிமன்றத்திலிருந்து பாஸ்ப்போர்ட்டை நிரந்தரமாக விடுவிக்க ஷம்சுல் இஸ்கண்டார் அகின் விண்ணப்பம்
October 5, 2026, 5:31 pm
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஐரீன் சோஃபியா உயிரிழப்பு: போலிஸ் தரப்பு உறுதி
October 5, 2026, 4:00 pm
உலகளாவிய கல்வியரங்கில் MSU பல்கலைக்கழகம் மாபெரும் சாதனை: சிறந்த 500 இடங்களுக்குள் முன்னேற்றம்
October 5, 2026, 3:34 pm
