நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊத்தான் மெலிந்தாங் ரெங்கநாதன் தோட்ட நில போராட்டம்: 35 ஆண்டுகளாக தீராத பிரச்சினை

ஊத்தான் மெலிந்தாங்:

பேரா பாகான் டத்தோ ஊத்தான் மெலிந்தாங் சிம்பாங் அம்பாட்டில் 1,600 ஹெக்டர் நிலத்தில் முதலீடு செய்த பங்குதார்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மதீப்பீடு செய்யும் தீர்ப்பு இன்று ஈப்போ உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட விருந்தது .

இந்த தீர்ப்பை செவிமடுக்க பங்குதாரர்கள் பலர் வந்திருந்தனர்.

நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த பங்குதார்களிடம் பேசிய நீதிமன்ற மொழிப் பெயர்ப்பாளர்,

இந்த வழக்கில் ஆஜராக விருந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றந்தில் ஆஜராகியுள்ளதால் வழக்கு நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஒகத்தி வைக்க்பட்டுவதாக அறிவித்தார்.

நீதிமன்றத்தில் தீர்ப்பை செவிமடுக்க காத்திருந்த பங்குதார்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

கடந்த 35 ஆண்டு காலமாக இந்த நில போராட்டத்தில குடும்பங்களின் கண்ணீர் கதை, பேராக் மாநிலத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

1979-ம் ஆண்டு எஸ்பிபி்கேபி  ன்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரெங்கநாதன் என்பவர், இந்த தோட்ட நிலத்தை பங்குகளாக பிரித்து விற்பனை செய்தார்.

ஒரு பங்கு சுமார் 26,250 ரிங்கிட் என்ற விலையில் பணம் செலுத்தி நிலத்தை வாங்கினர்.

நிலம் வேறு ஒரு நபரின் பெயருக்கு மாற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பங்குதாரர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset