செய்திகள் தமிழ் தொடர்புகள்
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
தாராபுரம்:
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமையில் நடைபெறவுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் இவ்விரு தொகுதிகளுக்கும் உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 165 பள்ளிகள், இடைத்தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களாகச் செயல்படவுள்ளன. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வாக்குச்சாவடி அலுவலர் பணியில் ஈடுபடவிருப்பதால், தாராபுரத்தில் 266 பள்ளிகளும், திருப்பூரில் 61 பள்ளிகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 21 பள்ளிகளிலும் வேலை நாள்களாக இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 348 பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதேபோல், மதுராந்தகம் தொகுதியிலும் தொகுதிக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இருப்பினும், இவ்விரு தொகுதிகளிலும் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமையில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, காலாண்டு விடுமுறை முடிந்து இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் மட்டும் அக். 7 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்கவிழா: மதுரையில் முதல்வர் விஜய்
September 23, 2026, 3:06 pm
