நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் முன்னேற்றம்

போர்தோ:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டிராகோவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் நார்வே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை ஜோய் கான்சாலோ, கோன்சாலோ ரமோஸ் ஆகியோர் அடித்தனர்.

ஜாம்பவான் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் போர்த்துகல் அணியினர் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜெர்மனி அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் கிரிஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset