நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தால் தான் மலேசிய ஏர்லைன்ஸ், பெர்கேசோ உருவானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்; வரலாற்றுப் பதிவுகள் மிகவும் முக்கியம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தால் தான் மலேசிய ஏர்லைன்ஸ், பெர்கேசோ உருவானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

1926இல் பிறந்த மஇகாவின் 6ஆவது தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் நூற்றாண்டு  விழா இவ்வாண்டு மிகவும் சிரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அண்மையில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தபால் தலை அண்மையில் வெளியிடப்பட்டது.

இன்று டானஸ்ரீ மாணிக்கவாசகத்தின் வரலாற்று நூல் இன்று வெளியிடப்பட்டது.

இதுவொரு சாதாரண நூல் அல்ல. மாறாக மஇகா என்ன செய்தது என்று கேட்பவர்கள் கண்டிப்பாக இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும்.

காரணம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தால் தான் மலேசிய ஏர்லைன்ஸ், பெர்கேசோ உருவானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இதே போன்று அவர் செய்த பல சாதனைகள் பலருக்கு தெரியாமல் போய் விட்டது.

நம்மில் பலருக்கு அவரின் சாதனைகள் தெரியவில்லை என்றால் அடுத்த தலைமுறையினருக்கு எப்படி அது தெரியும்.

அதன் அடிப்படையில் தான் இப்புத்தகம் இன்று வெளியீடு செய்யப்பட்டது. இம்முயற்சியை மேற்கொண்ட எழுத்தாளர் முத்தரசனுக்கு வாழ்த்துகள்.

அதே வேளையில் வரலாற்றுப் பதிவுகள் மிகவும் முக்கியம். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset