நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?

அலோர்காஜா:

மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தேசிய முன்னணி, பாஸ் கட்சி இடையேயான ஒத்துழைப்பு, நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தேசிய முன்னணிக்கு மேலும் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மத், பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் ஆகிய இரண்டு மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல்களில் இந்த ஆரம்பக்கட்ட முடிவு எட்டப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நான்கு தொகுதிகள் பெம்பான், புக்கிட் கட்டில், பாயா ரம்புட், ஆயர் குரோ சட்டமன்றத் தொகுதிகள் என்று கூறப்படுகிறது.

முதல்கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுவிட்டன.

மேலும் பாஸ் கட்சிக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட தொகுதிகளில் இந்த நான்கு தொகுதிகளும் அடங்கும் என தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset