செய்திகள் மலேசியா
மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கெஅடிலான் ஏற்றுக்கொண்டது
கோலாலம்பூர்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதிகள் கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையடுத்து, கெஅடிலான் தனது மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா, முன்னாள் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் கமரூடின் ஜாபர், முன்னாள் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங் ஆகியோரின் மேல்முறையீடுகளை PKR மத்திய தலைமை மன்றம் ஏற்றுக்கொண்டது.
கமரூதினும் சந்தாராவும் பெர்சத்து கட்சியில் இணைவதற்கு முன்பு, பிப்ரவரி 2020-ல் நடந்த ஷெரட்டன் இடமாற்றத்தின் போது கெஅடிலானை விட்டு வெளியேறினர்.
இதற்கிடையில், சூங், அப்போதைய பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக ஆதரவளிப்பதற்காக, பிப்ரவரி 2021-ல் கெடிலானை விட்டு வெளியேறினார்.
அவர்களின் உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
இதன் மூலம், அவர்கள் கெஅடிலான் அரசியலமைப்பு, விதிமுறைகளின்படி கட்சி நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், 2018 பொதுத் தேர்தலுக்கு முன்பு கையெழுத்திடப்பட்ட பத்திரங்கள் குறித்த கட்சியின் நிலைப்பாட்டில், உறுப்பினர் சேர்க்கை மாற்றமளிக்காது என்று அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 11:40 am
மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?
October 3, 2026, 11:32 pm
மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு
October 3, 2026, 8:22 pm
2027 பட்ஜெட்டில் மாணவர்களுக்கு நற்செய்தி: பிரதமர்
October 3, 2026, 8:21 pm
