நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய நாட்டு குத்தகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை; சம்பள உயர்வு எந்தவொரு சூழ்நிலையில் சிறு குத்தகையாளர்களை பாதிக்கக்கூடாது: ஆனந்தன்

கோலாலம்பூர்:

சம்பள உயர்வு எந்தவொரு சூழ்நிலையில் சிறு குத்தகையாளர்களை பாதிக்கக்கூடாது.

மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன் இதனை வலியுறுத்தினார்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்று பரவலாக பேசப்படுகிறது.

மக்களுக்கு சம்பள உயர்வு என்பது வரவேற்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இந்த சம்பள உயர்வு எந்தவொரு சிறு குத்தகையாளர்களையும் பாதிக்கக்கூடாது.

காரணம் குத்தகையாளர் துறையில் அனுபவத்தை பார்த்து தான் சம்பளம் வழங்கப்படும்.

ஆகையால் சம்பள உயர்வை அரசாங்கம் முறையாக ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்.

இதை தவிர்த்து அந்நிய நாட்டு குத்தகையாளர்களும் உள்ளூர் குத்தகையாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளனர்.

அவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


கடந்த காலங்களில் முறையான ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த அரசாங்கம் வாய்ப்பு வழங்கியது.

இதுபோன்ற தொழிலாளர்கள் நல்ல அனுபவத்துடன் நமக்கு கிடைப்பார்கள். ஆக இந்த வாய்ப்பை அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இந்திய குத்தகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறைக்கு பின் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆனந்தன் கூறினார்.

இன்றைய பயிற்சியில் மொத்தம் 50 குத்தகையாளர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுமானம் உட்பட அனைத்து குத்தகை தொழில்களையும் எப்படி தவறு இல்லாமல் செய்வது உட்பட பல விளக்கங்கள் இன்றைய பயிற்சியில் வழங்கப்பட்டது என்று ஆனந்தன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset