நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஷாஆலம்:

தேர்தல்களில் தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் நாட்டில் நிலையான ஆட்சியமைய வேண்டும் மாமன்னரின்  உத்தரவின் அடிப்படை ஒருமைப்பாட்டு அரசாங்கம் உருவானது.
மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய முன்னணி மத்திய அரசுக்கு ஆதரவு தந்து வருகிறது.

ஆனால் மாநிலத் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என்ற முடிவை தேசிய முன்னணி எடுத்தது.

தனித்து போட்டியிடும் முடிவு அடுத்த பொதுத் தேர்தலிலும் தொடரும் என்பதால் தேசிய முன்னணி நிலைப்பாட்டை மஇகா வரவேற்கிறது.

தேசிய முன்னணியின் இம்முடிவு தான் மஇகாவுக்கு ஒரு அங்கீகாரமும் அதிகாரத்தையும் தரும்.

சிலாங்கூர் மாநில மஇகாவின் 80ஆம் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

வரவிருக்கும் சிலாங்கூர் மாநில, பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற மாநில மஇகா தொடர்ந்து கடுமையாக போராட வேண்டும்.

குறிப்பாக நமது சாதனைகளையும் ஆட்சியில் உள்ளவர்கள் செய்யாததையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

இதுவே தேர்தல் காலங்களில் நமக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset