செய்திகள் மலேசியா
நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் அந்தோணி லோக் அல்ல; ஜசெகவே வெளியேற வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
டத்தோஸ்ரீ நஜிப் மன்னிப்பு விவகாரத்தில் அந்தோணி லோக் அல்ல. ஜசெகவே அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் வீட்டுக் காவல் மன்னிப்பை வழங்கினார்.
இந்த நாட்டை பொருத்த வரையில் மாமன்னர் பேச்சையும் உத்தரவையும் மதிக்க வேண்டும் என்பது தான் சட்டம்.
ஆனால் அதை மதிக்காமல் போக்குவரத்து அமைச்சர் பதிவில் இருந்து விலகுவதாக ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் அறிவித்தார்.
இப்போது நஜிப் வீட்டுக்கு வந்த பின் விலகுவதாக கூறுகிறார்.
இதை பற்றி நாம் கேள்வி எழுப்பினால் உடனே அக்கட்சியை சேர்ந்தவர்கள் நம்மை சாடுகிறார்கள்.
என்னை பொருத்தவரையில் மாமன்னரின் உத்தரவு உச்சப்பட்ச அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதை கேள்வி எழுப்புவது அநாகரீகமாகும்.
ஆகவே அந்தோணி லோக் பதவி விலகும் முடிவு எங்களை பொறுத்தவரையில் அரசியல் நாடகம் போல் உள்ளது.
ஆக அந்தோணி லோக் அல்ல, ஜசெக கட்சியே அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும்.
சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 3:47 pm
தனித்து போட்டியிடும் தேசிய முன்னணியின் முடிவை மஇகா முழுமையாக வரவேற்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 4, 2026, 11:40 am
மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?
October 4, 2026, 10:08 am
