நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில தேர்தல் கேந்திர அறிமுகம்; தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி தயார் என்பதை மக்களுக்கு உணர்த்தும்: டத்தோஸ்ரீ மெகாட்

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநில தேர்தல் கேந்திர அறிமுக விழா தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி தயார் என்பதை மக்களுக்கு உணர்த்தும்.

சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி தொடர்புக் குழு தலைவர் டத்தோஸ்ரீ மெகாட் ஜுல்கர்னாய்ன் கூறினார்.

ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தலில் கண்ட வெற்றியை தொடர்ந்து தேசிய முன்னணி அடுத்து மலாக்கா தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

இதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்


நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ எந்த தேர்தலாக இருந்தாலும் அதை தேசிய முன்னணி இன்னும் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

மற்ற மாநிலங்களில் மக்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பி வருகிறது. அந்த நீல அலை சிலாங்கூர் மாநிலத்திலும் பிரதிபலிக்கும்.

ஆக இந்த பொன்னான வாய்ப்பை தேசிய முன்னணி முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மஇகா உட்பட அனைத்து உறுப்பு, தோழமை கட்சிகளும் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

தொகுதிகள் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நிச்சியம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

குறிப்பாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளும் ஒதுக்கப்படும்.

இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில தேர்தல் கேந்திர அறிமுக விழா விரைவில் நடைபெறும்.

கிட்டத்தட்ட 20,000 பேர் இவ்விழாவில் திரள்வார்கள்.

இது  தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி தயார் என்பதை மக்களுக்கு உணர்த்தும்.

சிலாங்கூர் மாநில மஇகா 80ஆம் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டத்தோஸ்ரீ மெகாட் ஜுல்கர்னாய்ன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset