செய்திகள் மலேசியா
சிவநெறியையும் திருமுறைப் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி பாரட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
சிவநெறியையும் திருமுறைப் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி பாரட்டுக்குரியது.
மஇகா துணைத் தலைவரும் ரப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன இதனை கூறினார்.
நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பாடப் பாட, தில்லை நடராஜப் பெருமானே அந்தணரின் வடிவில் வந்து, தம் கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதிய ஒரே அருள்நூல் திருவாசகம் மட்டுமே.
மலேசிய நால்வர் மன்றமும் மலேசிய சிவனடியார் திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவாசக மாநாட்டை 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கித்' தொடக்கி வைத்ததில் பேரின்பம்.
மலேசிய மண்ணில் சிவநெறியையும் திருமுறைப் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி இது.
மனமுருகி இறைவனை வேண்டினால் நமது அகமும், புறமும் தெளிவாகி உலகியல் சிக்கல்களாலும், கவலைகளாலும் அலைபாயும் மனதை நொடிப் பொழுதில் அமைதிப்படுத்தலாம்.
வீடுதோறும் சிவவாசம் வீசட்டும், உள்ளம்தோறும் திருவாசகம் ஒளிரட்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தாஉன் குரைக்கழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே."
(திருப்புலம்பல்)
என் கடன் பனி செய்து கிடப்பதே...
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 11:40 am
மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?
October 4, 2026, 10:08 am
மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கெஅடிலான் ஏற்றுக்கொண்டது
October 3, 2026, 11:32 pm
மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு
October 3, 2026, 8:22 pm
