செய்திகள் மலேசியா
அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்ற போராடுவோம்: டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் சூளுரை
ஷாஆலம்:
அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்ற போராடுவோம்.
சிலாங்கூர் மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் இதனை கூறினார்.
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை தொடர்ந்து அடுத்து மலாக்கா மாநிலத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இரு மாநிலங்களில் கண்ட வெற்றியை தொடர்ந்து மலாக்காவிலும் தேசிய முன்னாள் வெற்றி பெரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சிலாங்கூர் மாநில தேர்தல் வேறு விதமாக இருக்கும். நாம் கண்டிப்பாக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
குறிப்பாக தேர்தலை எதிர்கொள்ள சிலாங்கூர் மாநில மஇகா இப்போதே தயாராக வேண்டும்.
18 ஆண்டுகளாக நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை. போராடியதால் மருத்துவமனை வருகையாளர் பதவி கிடைத்தது.
தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு பேர் மட்டுமே கிராமத் தலைவர்களாக இருக்கிறார்கள்.
ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மஇகா 80ஆம் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றும் போது இவர் இதனை குறிப்பிட்டார்.
ஷாஆலம் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடருக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்த வகையில் வெள்ள பேரிடரை முறையாக கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கும் 50 லட்சம் வெள்ளி மானியம் உயர்த்தப்பட வேண்டும்.
இந்த 50 லட்சம் வெள்ளி மானியம் போதுமான அளவு இல்லை என்று அவர் சொன்னார்.
இதனிடையே கோவில் விவகாரமும் சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 11:40 am
மலாக்கா மாநில தேர்தல்: 4 தொகுதிகளில் போட்டியிட பாஸ் கட்சிக்கு வாய்ப்பு?
October 4, 2026, 10:08 am
மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கெஅடிலான் ஏற்றுக்கொண்டது
October 3, 2026, 11:32 pm
மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு
October 3, 2026, 8:22 pm
