நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு

மலாக்கா: 

மலாக்கா மாநிலம் நாட்டின் முதன்மையான சுற்றுலா தலமாக விளங்குகிறது. 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மலாக்காவிற்கு 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோப் கூறினார். 

மாநிலம் முழுவதும் உள்ள தங்குமிடங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் மூலம் இந்த எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்டது.

இன்று இங்குள்ள பண்டார் ஹிலிரில் உள்ள சுதந்திரப் பிரகடன நினைவிடத்தின் முன்பாக, மலாக்காவிலிருந்து ஜோஹோரின் பத்து பஹாட் வரையிலான 'லெ டூர் டி லங்காவி 2026' மிதிவண்டிப் பந்தயத்தின் ஏழாவது கட்டத்தை நிறைவுசெய்த பிறகு சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்

சுற்றுலாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மாநிலப் பொருளாதாரத்திற்கு 11.32 பில்லியன் ரிங்கிட் பங்களித்துள்ளது..

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset