செய்திகள் மலேசியா
பெர்காட் தீபாவளி; இந்திய தொழில்முனைவோருக்கு 30 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி, விண்ணப்பங்கள் இன்று தொடங்குகின்றன: ஸ்டீவன் சிம்
புக்கிட் மெர்தாஜாம்:
அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகைக்குத் தயாராவதற்கு இந்திய தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு தீபாவளி மக்கள் வர்த்தக விழா செலவினங்கள் (BERKAT) திட்டத்தின் மூலம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
தெக்குன் மூலமான இந்த சிறப்புத் திட்டம், 12 மாத காலத்திற்கு ஆண்டுக்கு மூன்று சதவிகித லாப விகிதத்தில் 30,000 ரிங்கிட் வரை நிதியுதவி வழங்குகிறது என்று தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
குறிப்பாக, பொருட்ககை அதிகரிக்கவும் பண்டிகைக் காலத்திற்குத் தயாராகவும் குறுகிய காலத்தில் செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும் சிறு வணிகர்களுக்கு இந்த வசதி முக்கியமானது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்திய தொழில்முனைவோர், வர்த்தகர்களுக்காக 'பெர்காட் தீபாவளி' திட்டத்தை நான் அறிவிக்கிறேன்.
தீபாவளி தொழில்முனைவோர், தீபாவளி பஜார், லிட்டில் இந்தியா போன்றோர் இந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு, உணவு, பானங்கள், ஆடை, உபகரண விற்பனைத் துறைகளில் உள்ள சிறு வர்த்தகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த நிதியுதவியை கூடுதல் செயல்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்தலாம் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
'பெர்காட் தீபாவளி' திட்டம் இன்று முதல் நவம்பர் 8 வரை திறந்திருக்கும் என்றும், டெக்குன் ஆன்லைன் விண்ணப்ப முறை மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள தெக்குன் கிளை அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டம், 18 முதல் 65 வயதுக்குட்பட்ட இந்திய சமூகத்தைச் சேர்ந்த மலேசியக் குடிமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே உள்ள தெக்குன் தொழில்முனைவோரும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் அவர்கள் பெறும் மொத்த நிதியுதவித் தொகை 100,000 ரிங்கிட்டை தாண்டக்கூடாது.
100,000 ரிங்கிட்டுக்கும் குறைவான நிதியுதவி விண்ணப்பங்களுக்கான முடிவுகள் ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சு நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் BERKAT தீபாவளி விண்ணப்பங்களை விரைவுபடுத்தி எளிதாக்குமாறு சம்பந்தப்பட்ட முகமைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
பணப்புழக்கம் மற்றும் மாற்று கடன் மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்ட பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, மோசமான கடன் பதிவுகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு அமைச்சு உதவும் என்றும், ஆனால் ஒவ்வொரு விண்ணப்பமும் தணிக்கை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 11:32 pm
மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு
October 3, 2026, 8:22 pm
2027 பட்ஜெட்டில் மாணவர்களுக்கு நற்செய்தி: பிரதமர்
October 3, 2026, 8:21 pm
கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், கெத்தும் திராவத்துடன் ராணுவ வீரர் கைது
October 3, 2026, 8:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கும்: அமிரூடின்
October 3, 2026, 3:47 pm
F1 பந்தய இடத்திற்கு வருவதில் சிரமங்களை போக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்
October 3, 2026, 2:29 pm
நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது: விஸ்மா புத்ரா
October 3, 2026, 2:28 pm
