செய்திகள் மலேசியா
கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், கெத்தும் திராவத்துடன் ராணுவ வீரர் கைது
செராஸ்:
கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள ராணுவ முகாம் வாகனத்தின் நிறுத்துமிடத்தில், ஒரு கைத்துப்பாக்கி, பல டஜன் தோட்டாக்கள், சந்தேகத்திற்கிடமான கெத்தும் திராவத்துடன் காணப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செராஸ் மாவட்ட துணை போலிஸ் தலைவர் லிம் சுன் ஹாவ் இதனை கூறினார்.
30 வயதுடைய அந்த நபர், செராஸ் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்பு, சமூகப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த போலிஸ் குழுவினரால் நள்ளிரவு 12.42 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
சோதனையின் முடிவுகளில், அந்த ராணுவ வீரருக்கு இரண்டு போதைப்பொருள் வழக்குகள், ஒரு குற்றவியல் வழக்கு உட்பட மூன்று முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட ராணுவ வீரர், 1971 ஆம் ஆண்டின் துப்பாக்கிகள் (கடுமையான தண்டனைகள்) சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 1960 ஆம் ஆண்டின் ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 8(ஏ) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 11:32 pm
மலாக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை 11.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை பதிவு
October 3, 2026, 8:22 pm
2027 பட்ஜெட்டில் மாணவர்களுக்கு நற்செய்தி: பிரதமர்
October 3, 2026, 8:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கும்: அமிரூடின்
October 3, 2026, 3:47 pm
F1 பந்தய இடத்திற்கு வருவதில் சிரமங்களை போக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்
October 3, 2026, 2:29 pm
நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது: விஸ்மா புத்ரா
October 3, 2026, 2:28 pm
