நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027 பட்ஜெட்டில் மாணவர்களுக்கு நற்செய்தி: பிரதமர்

கோலாலம்பூர்:

உணவுக்குப் பணம் இல்லாமை, கடன் சுமை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் உட்பட, அவர்களிடையே உள்ள நிதிப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் 2027 பட்ஜெட்டில் இடம்பெறும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை சூசகமாகத் தெரிவித்தார்.

இளைஞர்களின் புகார்களையும் கோரிக்கைகளையும், குறிப்பாகக் கல்விச் செலவு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தேவைகள் குறித்தும் தாம் கேட்டறிந்ததாக அன்வார் கூறினார்.

"நாங்கள் படிக்க விரும்புகிறோம், ஆனால் பசியாக இருக்கிறோம் என்று கூறும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது இதை நான் பின்னர் அறிவிப்பேன்.

பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்புச் செலவைச் சமாளிக்க முடியாமல் கடனில் தள்ளப்படுகிறார்கள்.

இவை அனைத்தையும் நாம் செவிமடுத்துக் கேட்டுத் தீர்க்க வேண்டும் என்று அவர் இன்று இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இளைஞர் பொருளாதார மன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset