செய்திகள் மலேசியா
ஜனவரி முதல் செப்டம்பர் வரை 37,313 சட்டவிரோத குடியேறிகள் கைது: சைபுடின்
புத்ராஜெயா:
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை
37,313 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினையைக் கையாள்வதற்காக, உள்துறை அமைச்சு, மலேசிய குடிநுழைவுத் துறையுடன் இணைந்து, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 29 வரை நாடு முழுவதும் 10,374 அமலாக்க நடவடிக்கைகளைத் மேற்கொண்டுள்ளது.
அதே காலகட்டத்தில், பல்வேறு சோதனைகள், கள நடவடிக்கைகளில் மொத்தம் 137,603 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், 37,313 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டது.
சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உள்துறை மற்றும் குடிவரவு அமைச்சகத்தின் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முந்தைய நிர்வாக அமைப்பில் இருந்த மெத்தனப் போக்கு, முறைகேடுகள் காரணமாக, இந்தப் பிரச்சினை நீண்ட காலமாக நாட்டை வாட்டி வதைத்து வரும் ஒரு பாரம்பரியப் பிரச்சினையாகும், என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் அவர்களைப் பாதுகாப்பது தொடர்பான குற்றங்களுக்காக 1,809 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 1,692 பேர் மலேசியக் குடிமக்கள் என்று சைபுடின் நசுதியோன் கூறினார்.
சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டும் அமலாக்கம் கவனம் செலுத்தக்கூடாது, மாறாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்கள், அவர்களைப் பாதுகாப்பவர்கள், அவர்களின் இருப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களையும் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 3:47 pm
F1 பந்தய இடத்திற்கு வருவதில் சிரமங்களை போக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்
October 3, 2026, 2:29 pm
நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது: விஸ்மா புத்ரா
October 3, 2026, 11:51 am
அந்தோனி லோக் பதவி விலகலை உறுதி செய்ய வேண்டும்: துவான் இப்ராஹிம்
October 3, 2026, 11:42 am
ஆட்சிக் குழு இல்லாமல் நெகிரி செம்பிலான் 2027 பட்ஜெட் தாமதமாகும் அபாயம் உள்ளது: அருள்குமார்
October 3, 2026, 10:50 am
