நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை  மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டு, தற்போது மீட்பு முயற்சிகள் மாற்றப்படுவதாக நேப்பாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு, மேலாண்மை ஆணையம் 30 செப்டம்பர் 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைய் தொடர்ந்து, நேப்பாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் நிலச்சரிவுகளின் நிலையை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தொடர்பில்லாத நிலையில் இருப்பதாகக் கூறப்படும் 54 மலேசியர்களின் நிலையை உறுதி செய்வதற்கான மலேசியாவின் முயற்சிகள் முடிந்துவிட்டன என்று இந்த மாற்றம் அர்த்தப்படுத்தவில்லை.

மாறாக, காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான தொடர்பு மற்றும் கிடைக்கக்கூடிய பிற அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மலேசியா தொடர்ந்து உறுதிப்படுத்தலை நாடும்.

தொடர்பில்லாத பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தக்கூடிய ஆவணங்கள், நடைமுறைகள் தொடர்பாக நேப்பாளத்தில் உருவாக்கப்பட்டு வரும் சட்ட, நிர்வாக செயல்முறைகளின் வளர்ச்சியையும் அமைச்சகம் கண்காணிக்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஒவ்வொரு வழக்கிலும் உறுதிசெய்யப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு அமைச்சகம் தொடர்ந்து நேரடியாகத் தெரிவிக்கும் அது மேலும் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset