நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், 3 பேர் பயணம் என விதிமீறும் வாகனங்களுக்கு இன்று முதல் பார்த்த இடத்திலேயே அபராதம்

சென்னை:

சென்னை நகரில் சாலை விபத்​துகளை தடுக்​க​வும், விபத்​துகளில் ஏற்​படும் உயி​ரிழப்​பு​களை குறைக்​க​வும் சென்னை காவல் துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்​நிலை​யில், விதி​மீறல்​களை சம்பவ இடத்​திலேயே கண்​டறிந்து உடனடி​யாக அபராதம் விதிக்​கும் வகை​யில் நடவடிக்​கையை தீவிரப்​படுத்த சென்னை போக்​கு​வரத்து கூடு​தல் காவல் ஆணை​யர் சாமுண்​டீஸ்​வரி உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன்​படி, அடுத்த 10 நாட்​களுக்கு சென்​னை​யின் முக்​கிய சாலைகள், போக்​கு​வரத்து நெரிசல் மிகுந்த பகு​தி​கள் மற்​றும் விபத்​துகள் அதி​கம் நடை​பெறும் இடங்​களில் போக்​கு​வரத்து போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடுபட உள்​ளனர்.

Petition · Carrying original licenses is absurd. Let's join hands. - India  · Change.org

போக்​கு​வரத்து விதி​களை மீறும் வாகன ஓட்​டிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்​கப்பட உள்​ளது. குறிப்​பாக,  பைக்​கில் 3 பேர் பயணம் செய்​பவர்​கள், கார் ஓட்​டும்​போது சீட் பெல்ட் அணி​யாதவர்​கள், அதிவேக​மாக வாக​னம் ஓட்​டு​பவர்​கள், சிக்​னல் விதி​களை மீறு​பவர்​களை கண்​காணித்து பார்த்த இடத்திலேயே அபராதம் விதிக்க போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர்​.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset