செய்திகள் மலேசியா
அந்தோனி லோக் பதவி விலகலை உறுதி செய்ய வேண்டும்: துவான் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து, போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் உறுதியளித்ததை, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் நினைவூட்டினார்.
நஜிப் வீடு திரும்புவாரா இல்லையா என்பது உண்மையான பிரச்சினை அல்ல.
மாறாக, சம்பந்தப்பட்ட கட்சியால் முன்னரே எதிர்க்கப்பட்ட மன்னிப்பு வாரியத்தின் முடிவுதான் பிரச்சினை என்று துவான் இப்ராஹிம் கூறினார்.
அவர்கள் ஒரு நேர்மையான கட்சியாகக் கருதப்பட விரும்பினால், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
நஜிப் நாடு திரும்புவாரா இல்லையா என்று அவர்கள் காத்திருக்கத் தேவையில்லை.
மன்னிப்பு வாரியம் ஒரு முடிவை எடுக்கும்போது, அவர் அதை எதிர்த்து, அந்த முடிவை ஏற்காமல் இருப்பதுதான் பிரச்சினை என்று அவர் கூறினார்.
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டதாக ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.
கடிதத்தை சமர்ப்பிப்பதற்காக நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்ததாகவும், ஆனால் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் வேளையில் தற்போதைக்கு பதவியில் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 3:47 pm
F1 பந்தய இடத்திற்கு வருவதில் சிரமங்களை போக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்
October 3, 2026, 2:29 pm
நேப்பாளத்தில் காணாமல் போன 54 நபர்களின் நிலையை மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது: விஸ்மா புத்ரா
October 3, 2026, 2:28 pm
ஜனவரி முதல் செப்டம்பர் வரை 37,313 சட்டவிரோத குடியேறிகள் கைது: சைபுடின்
October 3, 2026, 11:42 am
ஆட்சிக் குழு இல்லாமல் நெகிரி செம்பிலான் 2027 பட்ஜெட் தாமதமாகும் அபாயம் உள்ளது: அருள்குமார்
October 3, 2026, 10:50 am
