செய்திகள் மலேசியா
ஆட்சிக் குழு இல்லாமல் நெகிரி செம்பிலான் 2027 பட்ஜெட் தாமதமாகும் அபாயம் உள்ளது: அருள்குமார்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாதது, மாநிலத்தின் 2027 பட்ஜெட் தாமதமாவதற்குக் காரணமாக அமையக்கூடும்.
நெகிரி செம்பிலான் ஜசெக தலைவர் ஜே. அருள்குமார் இதனை கூறினார்.
நீலாய் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அருள்குமார்,
ஆட்சிக்குழுவின் ஒப்புதல் தேவைப்படும் ஒரு முக்கிய கட்டத்தை பட்ஜெட் செயல்முறை எட்டும்போது, அது எவ்வாறு தொடரும் என்பதே முக்கிய கவலையாக உள்ளது.
ஆட்சிக் கூட்டம் இல்லாத நிலையில், பட்ஜெட் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு சட்டசபைக்குக் கொண்டு செல்லப்படும்?.
அங்கீகரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை இல்லையென்றால், மாநில அரசு சம்பளம், பயன்பாட்டுக் கட்டணங்கள், பிற செலவுகளை எப்படிச் செலுத்தும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பதவியேற்றதை மீறியதற்காக அதன் 10 உறுப்பினர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் நெகிரி செம்பிலான் செயற்குழு இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2026, 11:04 am
தீயணைப்பு உதவிக்கான முன்மொழிவுக்கு இந்தோனேசியா பதிலளிக்கவில்லை: ஜாஹித்
October 12, 2026, 11:03 am
ஜாலான் கூச்சிங்கில் 6 வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 5 வயது சிறுவன் பலி
October 12, 2026, 10:39 am
ஷா ஆலாமில் சாலை விபத்து: இருவர் பலி, ஐவர் காயம்
October 12, 2026, 10:01 am
புகைமூட்டத்தால் இன்று திங்கட்கிழமை மூடப்பட்ட, திறக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்
October 12, 2026, 10:00 am
மலாக்கா மாநிலத் தேர்தல்: 8 முதல் 9 தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் இலக்கு
October 12, 2026, 9:59 am
பிரதமரை விமர்சிப்பது குற்றமல்ல: டத்தோஸ்ரீ அன்வார்
October 12, 2026, 9:58 am
நாங்கள் தொடர்ந்து அதிரடி படைப்போம்: மரேஸ்கா
October 11, 2026, 7:16 pm
