நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றமோ சட்டமன்றமோ எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் மஇகா தயாராக இருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

சிரம்பான்:

நாடாளுமன்றமோ சட்டமன்றமோ எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் மஇகா தயாராக இருக்க வேண்டும்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்கள் விவகாரம்  நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ஆனால் இந்த விவகாரத்தின் உண்மை நிலவரம் மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு தெரியுமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

ஆக தற்போதைய அரசாங்கத்தில் மஇகா தான் இடம் பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இவ்விவகாரத்தின் உண்மை நிலவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதது மஇகாவின் கடமையாகும்.

மேலும் அடுத்த 6 மாதங்களில் சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்றால் அது தானாக கலைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அதே வேளையில் 16ஆவது பொதுத் தேர்தலும் வெகு தொலைவில் இல்லை என்பதும் பரவலாக தெரிகிறது.

ஆக எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் மஇகா தயாராக இருக்க வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தல் போல் நாம் மீண்டும் தோல்வி கண்டு விடக்கூடாது. அதற்கு நெகிரி செம்பிலான் மஇகா ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக இந்தியர்களின் ஆதரவை முழுமையாக நாம் பெற வேண்டும்.

நெகிரி செம்பிலான் மஇகாவின் 80ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset