நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027 பட்ஜெட்டில் தொழில்துறை, திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது: குலசேகரன்

ஈப்போ:

இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் வாய்ப்புகளை முறையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் இதனை கேட்டுக்கொண்டார்.

நாட்டின் வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்குத் தேவையான திறன்களை மாணவர்களும் இளைஞர்களும் பெற்றுக்கொண்டு, எதிர்கால வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஈப்போ புந்தோங்கில் உள்ள ஐஆர்சி மண்டபத்தில் நடைபற்ற மலேசிய தமிழ் நெறியுரைஞர் அமைப்பின் 5ஆவது தேசிய மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து ஆசிரியர்கள் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் பேசிய அவர்
மாணவர்கள் கல்வியை மட்டும் பெற்றிருப்பது போதாது.

கல்வியுடன் இணைந்த தொழில்நுட்பத் திறன்களையும் வளர்த்துக்கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சூரியசக்தி, மின்சாரத் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைகள் எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகளை வழங்கக்கூடிய துறைகளாக உள்ளன.

எனவே, மாணவர்கள் இத்துறைகளில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளைப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்னர் வேலைவாய்ப்பைப் பெறுவது மட்டுமன்றி, தொழில்துறை சார்ந்த திறன் மற்றும் பயிற்சிகளைப் பெற்றிருந்தால் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

தொழில் நுட்பப் பயிற்சிகளைப் பெற்றவர்களில் சுமார் 98 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று குலசேகரன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset