செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பியதற்கு காரணம் மஇகாவா?, விரக்தியா?; ஆராய வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பியதற்கு காரணம் மஇகாவா?, விரக்தியா? என்பதை ஆராய வேண்டும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இரு தொகுதிகளில் மஇகா போட்டியிட்டது. இந்த இரு தொகுதிகளிலும் மஇகா தோல்வி கண்டது.
இருந்தாலும் இம்மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய முன்னணி ஆட்சியமைத்தது.
தேசிய முன்னணியின் இந்த வெற்றிக்கு இந்தியர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக இந்தியர்களின் ஆதரவு மீண்டும் தேசிய முன்னணிக்கு திரும்பியுள்ளது.
இதற்கு மஇகாவின் பங்களிப்பும் அயராத சேவைகளும் முக்கிய காரணமாக உள்ளது.
அதற்காக இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பி விட்டது என மஇகா அலட்சியமாக இருக்கக் கூடாது.
உண்மையிலேயே நெகிரி செம்பிலானில் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பியதற்கு மஇகா காரணமா அல்லது மக்களின் விரக்தி மனப்பான்மை காரணமா என்பதை மாநில மஇகா ஆராய வேண்டும்.
இதை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மாநில மஇகா மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மஇகாவை வலுப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
நெகிரி செம்பிலானில் மஇகாவின் கடந்த கால பொற்காலம் மீண்டும் வரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 5:27 pm
காவல்துறை அதிகாரியைத் தாக்கி காயம் விளைவித்த மியன்மார் நாட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
October 2, 2026, 4:00 pm
மோட்டார் சைக்கிள் - கார் உட்படுத்திய சாலை விபத்து: இரு பள்ளி மாணவிகள் பலி, ஒருவர் காயம்
October 2, 2026, 2:20 pm
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
October 2, 2026, 2:18 pm
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
October 2, 2026, 2:16 pm
