நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்குகிறது: கல்வியமைச்சு

புத்ரா ஜெயா:

நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2027ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

குழு ஏ மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு, கல்வியாண்டு  2027 டிசம்பர் 2ஆம் தேதி வரையிலும், குழு பி மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2027 டிசம்பர் 3ஆம் தேதி வரையிலும் நீடிக்கும்.

ஏ குழுவில் கெடா, கிளந்தான்,  திரெங்கானு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது.

அதே சமயம் பி குழுவில் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகிய மாநில பள்ளிகள் உள்ளன.

நோன்பு பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி, ஈகை பெருநாள், கெமதன் திருவிழா, கவாய் தினம், விசாக், கிறிஸ்துமஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய 2027 பள்ளி அமர்வு முழுவதும் பண்டிகை விடுமுறை நாட்களுக்கான தேதிகளையும் கல்வியமைச்சு ஒருங்கிணைத்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset