செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
போனஸ் அயர்ஸ்:
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு போனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் கௌர டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
39 வயதாகும் மெஸ்ஸி சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.
தற்போது, கடைசியாக ஓர் ஆட்டமாக அக்.6ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சியை முன்னிட்டு விளையாடவிருக்கிறார்.
அர்ஜெண்டினா அணிக்காக 207 முறை விளையாடியுள்ள மெஸ்ஸி 125 கோல்கள், 60 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார்.
அவரது தலைமையில் அர்ஜெண்டினா அணிக்கு 2022 உலகக் கிண்ணம், 2021, 2024 கோபா அமெரிக்கா, 2022 ஃபைனலிஸ்மா ஆகிய கிண்ணங்களை வென்று கொடுத்துள்ளார்.
மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக 2008ல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். யு-20 உலகக் கிண்ணத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கவிருப்பதாக அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் யுபிஏ அறிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2026, 10:41 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
