செய்திகள் மலேசியா
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
பெட்டாலிங்ஜெயா:
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சென் சுங், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி பதவியிலிருந்து தனது நிபந்தனையற்ற ராஜினாமாவை இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் அறிவித்தார்.
15ஆவது பொதுத் தேர்தலில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சென் சுங்,
தனது ராஜினாமா கடிதத்தை நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துலிடம் சமர்ப்பித்ததாகக் கூறினார்.
கடந்த புதன்கிழமை கெஅசிலான் கட்சியிடமிருந்து, அவரது கட்சி உறுப்பினர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கும் கடிதத்தைப் பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பகுதி மேம்பாட்டு ஒதுக்கீடுகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் MyKhas அமைப்பிற்கான தனது அணுகல் தடுக்கப்பட்டது.
மேலும் பெட்டாலிங் ஜெயாவிற்கான மீதமுள்ள 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு இனி தனது அலுவலகத்தின் மூலம் அனுப்பப்படவில்லை என்று சென் சுங் முன்னதாகக் கூறியிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 2:20 pm
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
October 2, 2026, 2:16 pm
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக நாடு திரும்பினார், 54 பேர் இன்னும் காணவில்லை
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:47 am
