செய்திகள் மலேசியா
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக நாடு திரும்பினார், 54 பேர் இன்னும் காணவில்லை
கோலாலம்பூர்:
நேப்பாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 55 மலேசியர்களில் ஒருவர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மலேசியர்களின் குடும்பங்களின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் ரத்தினம் இதனை கூறினார்.
தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்த அந்த நபர், ஒரு சீன நாட்டவர். அவர் அக்டோபர் 1 ஆம் தேதி காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் தகவல் தெரிவித்தார்.
37 நாட்கள் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்த அவர், இன்று காலை மலேசியாவிற்குப் பத்திரமாக வந்து சேர்ந்து, தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று, நேப்பாளத்தில் திடீர் வெள்ளம் மற்றும் பேரழிவுகரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
நேப்பாள-சீன எல்லையை ஒட்டிய உயர்நிலப்பகுதியில் ஏற்பட்ட பனியாறு, பாறைச்சரிவினால் இந்தத் துயரம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 2:20 pm
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
October 2, 2026, 2:18 pm
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:47 am
