நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காவல்துறை அதிகாரியைத் தாக்கி காயம் விளைவித்த மியன்மார் நாட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு 

குவாந்தான்: 

கடந்த மாதம் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்ததாக  இரு மியன்மார் நாட்டவர்கள் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

இருப்பினும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லை காரணம் அவர்கள் இருவருக்கும் மலாய் மொழி விளங்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது 

விசாரணையின் போது, ​​துணை அரசு வழக்கறிஞர்களான வோங் ஷி கியான் மற்றும் ஹர்தாவ் சிங் பால்டெப் சிங் ஆகியோர் வழக்கை நடத்தினர்

மலேசியாவில் வசிப்பதற்கு அந்த இரண்டு வெளிநாட்டினரிடமும் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாததால், அவர்களுக்குப் பிணை வழங்கப்படக்கூடாது என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

மியான்மர் மொழிபெயர்ப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அனுமதிக்கும் வகையில், நீதிபதி சித்தி ஹஜார் முஸ்தஃபா இந்த வழக்கை அக்டோபர் 14 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நிர்ணயித்தார்.

முன்னதாக, 40 வயதுடைய போலிஸ் காப்பரல் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது .இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நிகழ்ந்ததாக போலிஸ் உறுதி செய்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset