செய்திகள் மலேசியா
மோட்டார் சைக்கிள் - கார் உட்படுத்திய சாலை விபத்து: இரு பள்ளி மாணவிகள் பலி, ஒருவர் காயம்
ஈப்போ:
மோட்டார் சைக்கிள் - கார் இடையே மோதி கொணட சாலை விபத்தில் இரு பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
இந்த சம்பவம் இன்று ஈப்போ, தம்பூன் தாமான் பெர்பாடுவான் ரியாவில் நிகழ்ந்தது
சாலை விபத்து தொடர்பாக காலை 7.20 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தம்பூன் தீயணைப்பு, மீட்புப்படை தரப்பு சொன்னது
சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த பயங்கர சாலை விபத்து நிகழ்ந்ததாக பேராக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மத் கூறினார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட இரு பள்ளி மாணவிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர்.
மற்றொரு மாணவர் கடுமையான காயங்களுக்கு இலக்கான வேளையில் மருத்துவ ஊழியர்கள் முதலுதவி வழங்கிய நிலையில் மேற்சிகிச்சைகாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 5:27 pm
காவல்துறை அதிகாரியைத் தாக்கி காயம் விளைவித்த மியன்மார் நாட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
October 2, 2026, 2:20 pm
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
October 2, 2026, 2:18 pm
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
October 2, 2026, 2:16 pm
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக நாடு திரும்பினார், 54 பேர் இன்னும் காணவில்லை
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
