நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3,494 மருத்துவர்கள் விலகல்; பணியாளர்களைத் தக்கவைக்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: எம்எம்ஏ

கோலாலம்பூர்:

சுகாதார அமைச்சு பணியாளர்களைத் தக்கவைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மலேசிய மருத்துவ சங்கத்தின் (எம்எம்ஏ) தலைவர்  டாக்டர் எல். சிவனேசன் இதனை கூறினார்.

சுகாதாரப் பணியாளர்களைத் தக்கவைத்தல், பரிசோதனை முதல் சிகிச்சை வரையிலான தொடர்ச்சியை வலுப்படுத்துதல், நாட்டின் ஒரு முக்கிய பங்காளியாக தனியார் சுகாதாரத் துறையின் பங்கை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களில் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் தற்போது சுமார் 11,000 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும், தாதியர் பணியிடங்களுக்கான காலி இடங்களின் விகிதம் சுமார் 18 சதவீதமாக இருப்பதாகவும் அவர் கூறினா.

2019 மற்றும் 2023-க்கு இடையில், 2,385 நிரந்தர மருத்துவ அதிகாரிகள்,  1,109 சிறப்பு மருத்துவர்கள் உட்பட மொத்தம் 3,494 மருத்துவர்கள் சுகாதார அமைச்சில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் சிறப்பு மருத்துவர்களின் ராஜினாமாக்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில் காலி இடங்களின் விகிதம் 96 சதவீதத்திலிருந்து 83 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நிரப்பப்படாத ஒவ்வொரு பணியிடமும், ஏற்கனவே பணிச்சுமையால் தவிக்கும் பணியாளர்களுக்கு மேலும் அழுத்தத்தைச் சேர்ப்பதோடு, பொது சுகாதார அமைப்பின் திறனைக் குறைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

அனுபவம் வாய்ந்த ஒரு நிபுணர் பணியிலிருந்து விலகும்போது, ​​நாடு ஒரு மருத்துவரை மட்டும் இழப்பதில்லை.

பல ஆண்டுகால மருத்துவ அனுபவம், நிறுவன அறிவு மற்றும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்சி அளித்து, மேற்பார்வையிட்டு, வழிகாட்டும் திறன் ஆகியவற்றையும் இழக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset