செய்திகள் மலேசியா
குறைந்தபட்ச ஊதிய விவகாரம்: மூன்று விவகாரங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: ஜொனாதன் வேலா கோரிக்கை
கோலாலம்பூர்:
குறைந்தபட்ச ஊதிய அமலாக்கத்தை மறுஆய்வு செய்யும் போது தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும், அதே வேளையில் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஆதரவளிக்கவும் அரசாங்கம் மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டவளை பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ஜோனாதன் வெலா, தெளிவான மாற்றுக் கால அவகாசம், நிறுவனங்களுக்கான நிதி உதவி மற்றும் கள ஆய்வு ஆகியவை இதில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்டப்படியிலான அமலாக்கமும் தொழிலாளர்கள் தங்களின் நிலையைப் புரிந்துகொள்ளவும், முதலாளிகள் தங்களை மாற்றிக்கொள்ளவும் தெளிவான திசைகாட்டியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொழிலாளர்களின் பொருளாதார நிலை மேம்படவும், அதே நேரத்தில் சிறு வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த சமநிலை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்த கூடுதல் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 5:27 pm
காவல்துறை அதிகாரியைத் தாக்கி காயம் விளைவித்த மியன்மார் நாட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
October 2, 2026, 4:00 pm
மோட்டார் சைக்கிள் - கார் உட்படுத்திய சாலை விபத்து: இரு பள்ளி மாணவிகள் பலி, ஒருவர் காயம்
October 2, 2026, 2:20 pm
சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்னால் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி: எம்சிஎம்சி விசாரணை
October 2, 2026, 2:18 pm
மரக்கட்டையை போல் இருப்பதில் விரும்பவில்லை: சென் சுங் ராஜினாமா
October 2, 2026, 2:16 pm
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக நாடு திரும்பினார், 54 பேர் இன்னும் காணவில்லை
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
