நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது 

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செபெராங் ஜெயாவில் உள்ள Akira Basketball Court-இல்  நடைபெறவுள்ளது.

இப்போட்டியை Persatuan Pengusaha Perfileman India Pulau Pinang மற்றும் Persatuan Kabaddi Pulau Pinang ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்கின்றன. இப்போட்டி தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை வளர்ப்பதுடன், கபாடி விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கிலும், மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் விளையாட்டு ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆதரவு வழங்குகிறது. நிகழ்வில் முக்கிய பிரமுகர்களாக
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தரராஜூ சோமு,  பினாங்கு கபாடி சங்கத் தலைவர் அர்ஜூனன் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான விக்னேஸ் பிரபு  உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பினாங்கில் நடைபெறும் இந்த தேசிய கபாடி போட்டி, விளையாட்டு ஆர்வலர்களுக்கு சிறந்த போட்டி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset