நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி

சிப்பாங்:

தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறார்.

சுங்கை பீலேக் இடைநிலைப் பள்ளி சிவசாமி சுந்திரமூர்த்தி இதனை கூறினார்.

சுங்கை பீலேக் இடைநிலைப் பள்ளியின் 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து சிலாங்கூர் சுல்தான் ஜூப்லி பேரா கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 48 அணிகள் தகுதிப் பெற்றுள்ள குழுக்களில் எங்கள் பள்ளி அணியும் ஒன்றாகும்.

இப்போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளி அணி பயிற்றுநர் சந்திரன் தலைமையில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் டச்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ரவீந்திரன் எங்கள் பள்ளி அணிக்கு ஜெர்சிகளை அன்பளிக்காக வழங்கினார்.

குறிப்பாக 19 வயதுக்கு கீழ்ப்படவர்களுக்கான தேசிய அணி  வீரரான ஆர். பிரவினாஷ் இந்த ஜெர்சிகளை எங்களிடம் வழங்கினார்.

MISC டச்ட்ரானிக்ஸ் கிளப் வீரரான அவர் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறார்.

அவரிடம் இருந்து ஜெர்சிகளை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வேளையில் டத்தோஸ்ரீ ரவீந்திரன், ஆர். பிரவினாஷ், கென்னத் கண்ணா உட்பட அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset