செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
கோபன்ஹாகன்:
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் அணியினர் வெற்றி பெற்றனர்.
பார்கன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் டென்மார்க் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் கொண்டு டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை ஜோனோ கேன்செலோ, கோன்சலோ ரமோஸ், விடின்ஹா, ஜோனோ ஃபெலிக்ஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த ஆட்டத்தில் போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறகவில்லை.
இருந்தாலும் போர்த்துகல் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ரொனால்டோ இல்லாத போர்த்துகல் மீது அதிக நம்பிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
September 29, 2026, 11:09 am
