நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம் 

தாராபுரம்:

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

இதனைத் தொடர்ந்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது அமைச்சர் ராஜ்மோகனுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பைதொடர்ந்து சத்தியபாமாவின் காதோரம் வந்து அவர் ஏதோ பேசினார். அது வைரலாகியது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் தன்னை அவதூறாகப் பலர் பேசுவதாகக் கூறி கண்கலங்கினார். 2 மாதங்களாக செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், சமூகவலைதள விமர்சனங்களால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு கண்கலங்கினார்.

அருகில் இருந்த முதல்வர் விஜய், சத்தியபாமாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டு ஆசுவாசப்படுத்தினார்.

இந்நிலையில், செல்போன் அழைப்பைத் தொடர்ந்து சத்திபாமாவின் காதுகளில் ராஜ்மோகன் பேசிய பிறகே சத்தியபாமா அழுததாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் வெகுநேரமாக காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு சத்தியபாமாவிடம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset