நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

25 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டது; அரண்மனையை பற்றி அல்ல: ஜலாலுடின்

கோலாலம்பூர்:

25 நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த ஒரு சிறப்புக் கூட்டம், மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம், நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்டுவான் பெசார் விவகாரங்களை பற்றி விவாதிக்கவில்லை.

நெகிரி செம்பிலான் அம்னோ தொடர்புக்  குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறுகையில், கட்சியை வலுப்படுத்துவதோடு, அரசாங்கக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் அந்தந்த தொகுதிகளில் தங்கள் ஆணையை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் கூட்டம் அதிக கவனம் செலுத்தியது என்றார்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, தற்போதைய நிகழ்வுகளால் ஈர்க்கப்பட வேண்டாம்.

மாநிலத்தின் அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.

25 சட்டமன்ற உறுப்பினர்களும் தத்தமது பகுதிகளில் தங்கள் கடமைகளை ஆற்றவும், கட்சியை வலுப்படுத்தவும், மக்களின் பிரதிநிதிகளாகத் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவும் உதவும் வகையில், நாங்கள் ஒரு வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்கினோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset