நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் டத்தோஸ்ரீ சுஹைலி அதிகாரி ஒருவரைக் கோபத்துடன் திட்டி பேசும் காணொலி வைரலாகிறது

சிப்பாங்:

கேஎல்ஐஏவில் டத்தோஸ்ரீ சுஹைலி அதிகாரி ஒருவரைக் கோபத்துடன் திட்டி பேசும் காணொலி வைரலாகி வருகிறது.

இந்த காணொலிப் பதிவு தொடர்பாக, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது சுஹைலி முஹம்மது ஜைன் ஒரு ஊடக அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவில் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, ​​இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடுவதாக முஹம்மது சுஹைலி அறிவித்தார்.

முன்னதாக, வைரலான அந்தக் காணொளியில், சுஹைலியை போன்ற தோற்றமுடைய ஒருவர் மற்றொருவரைத் திட்டுவது காணப்பட்டது.

உண்மையில், அந்தக் காணொலியில் பாதிக்கப்பட்டவரின் தலையும் மிகவும் கடுமையாகப் பிடிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், முஹம்மது சுஹைலி தன்னைத் திட்டியதாக அந்த நபர் கூறிய புகாரின் நகல் ஒன்று வைரலாகியுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் செய்யப்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset