செய்திகள் மலேசியா
ஆலயங்களின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்; டிக்டாக் மோகத்திற்காக ஆலயங்களில் அத்துமீற வேண்டாம்: இந்து சங்கம் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
ஆலயங்களின் புனிதத்தை காக்கும் வகையில் டிக்டாக் மோகத்திற்காக ஆலயங்களில் அத்துமீற வேண்டாம் என்று மலேசிய இந்து சங்கம் எச்சரித்துள்ளது.
மலேசியத் திருநாட்டில் அமைந்துள்ள நமது ஆன்மீகத் தலங்களான இந்துக் கோயில்களின் புனிதத்தன்மையைக் காக்கும் பொருட்டு, மலேசிய இந்து சங்கம் இந்த அதிரடியான, கடுமையான கண்டன அறிக்கையை வெளியிடுகிறது என்று அதன் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் கூறினார்.
சமீப காலமாக, நம் நாட்டின் சில ஆலய வளாகங்களுக்குள் நாகரிகமற்ற உடைகளை அணிந்து வருவது, மது அருந்துவது, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற சமூக விரோத செயல்கள் ஒரு கேவலமான நாகரிகப் போக்காக அதிகரித்து வருவதை நாம் மிகுந்த வேதனையுடனும் அதிர்ச்சியுடனும் கவனிக்கிறோம்.
ஆலயங்களின் புனிதத்தைக் குலைக்கும் இதுபோன்ற இழிவான செயல்களைக் கண்டும்காணாமல் மௌனம் காக்கும் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களின் செயலற்ற தன்மைக்கு மலேசிய இந்து சங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆலயங்கள் என்பவை வெறும் சுற்றுலாத் தலங்களோ அல்லது பொழுதுபோக்கு இடங்களோ அல்ல.
அவை நமது முன்னோர்களின் ஆன்மீக ஆற்றல் நிலைபெற்றுள்ள, அமைதியும் பக்திப் பரவசமும் பொங்கும் புனிதத் தலங்களாகும்.
இறையருள் பொழியும் அந்தத் தூய்மையான இடங்களில் முறையற்ற ஆடைகள் அணிவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும் இறைவனை அவமதிக்கும் செயலாகும்.
ஆலயங்களின் புனிதத் தன்மையைக்
காப்பாற்ற வேண்டியது இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்து சமூகத்தினரின் மிக முக்கியமான கடமையாகும்.
மேலும், சமூக வலைத்தளங்களில் (TikTok, Instagram போன்ற தளங்களில்) 'லைக்ஸூம்' (Likes), 'வியூஸூம்' (Views) தேடும் நோக்கில், சில விஷமிகள் ஆலயங்களை ஒரு கேளிக்கை இடமாகவும், ரவுடித்தனம், சட்டவிரோதச் செயல்கள் நடக்குமிடமாகவும் சித்தரிக்கும் வகையில் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்பட எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இது ஆலயங்களை இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது வழிபாட்டுத் தலங்களின் மீது களங்கத்தை ஏற்படுத்துகின்றது.
இத்தகைய வெளி நடவடிக்கைகளை ஆலய வளாகத்திற்கு அருகில் அல்லது உள்ளே முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும்
திரைப்படங்கள் அல்லது நாடகங்களின் வணிக நோக்கங்களுக்காக எந்தவொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் ஆலய வளாகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
குறிப்பாக, ஆலயங்களின் ஆன்மீகச் சூழலையும் அல்லது இந்து மத வழிபாட்டு முறைகளையும் தவறான, எதிர்மறையான அல்லது இழிவுபடுத்தும் கோணத்தில் சித்தரிக்கும் காட்சிகளைப் படமாக்கக் கோயில் நிர்வாகங்கள் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது.
கோயில் நிருவாகங்கள் இனிவரும் காலங்களில் இது போன்ற விஷயங்களில் மிகுந்த விழிப்புணர்வுடனும் கண்டிப்புடனும் செயல்பட வேண்டும்.
ஆலயங்களின் நுழைவாயிலிலேயே தகுந்த பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து, உடை விதிகளை (Dress Code) கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
மது அருந்திவிட்டு வருபவர்களையும், புகைப்பிடிப்பவர்களையும், ரீல்ஸ் (Reels), டிக்டாக் மோகத்தில் ஆலயங்களின் அமைதியைக் குலைப்பவர்களையும் உடனடியாக வெளியேற்றுவதோடு, தேவைப்பட்டால் போலிசாரிடம் ஒப்படைத்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
நிர்வாகம் மெத்தனமாக இருந்தால், அந்த நிர்வாகத்திற்கு எதிராக மலேசிய இந்து சங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கப்படுகிறது.
இந்துக்களின் ஆன்மீக அடையாளமான ஆலயங்களின் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாப்போம்; கலாச்சார சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 11:38 am
இந்திய வர்த்தகர்களுக்கு நம்மவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வேண்டுகோள்
October 1, 2026, 10:29 am
வீட்டோ அதிகாரம் ஏன் ஐந்து நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது?: டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கேள்வி
October 1, 2026, 10:25 am
கேஎல்ஐஏவில் டத்தோஸ்ரீ சுஹைலி அதிகாரி ஒருவரைக் கோபத்துடன் திட்டி பேசும் காணொலி வைரலாகிறது
September 30, 2026, 10:34 pm
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:32 pm
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
September 30, 2026, 10:31 pm
