செய்திகள் மலேசியா
கிள்ளானில் திடீர் வெள்ளம்: 7 குடும்பங்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றனர்
கிள்ளான்:
கிள்ளான் அருகிலுள்ள தாமான் ரஷ்னாவில் சிக்கியிருந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை மீட்க, தீயணைப்பு வீரர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு திடீர் வெள்ளத்தில் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
நீர் மட்டம் அதிகமாக இருந்ததாலும், தீயணைப்பு வாகனங்களால் அந்த இடத்திற்குள் நுழைய முடியாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புப் படையின் செயல்பாடுகளின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஷ்பர் கூறினார்.
முன்னதாக, மாலை 7 மணிக்குத் துறைக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.
அதைத் தொடர்ந்து, கிள்ளான் தெற்கு தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிகரித்த நீர் மட்டம் காரணமாக, தீயணைப்பு வாகனங்களால் சம்பவ இடத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு இடுப்பளவு வெள்ளம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதியை அடைய தீயணைப்பு வீரர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது.
நான்கு குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:33 pm
பாசிர் கூடாங்கில் போலிசார் லோரியைத் துரத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
September 30, 2026, 10:32 pm
தேசிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 8,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
September 30, 2026, 10:31 pm
எம்ஏஎம் நேர்மைக் குழுவிற்கு அயோப் கான், சுஹாய்லி நியமனம்
September 30, 2026, 10:30 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி பொதுப் பேரவையின் உற்சாகமும் பரபரப்பும் இன்னும் உணரப்படுகின்றன: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 30, 2026, 10:29 pm
டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: பரமேஸ்வரன்
September 30, 2026, 10:28 pm
உணவு முறைகளுடன் ஊட்டச் சத்துகள் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்: டத்தின்ஸ்ரீ தமயந்தி தேவி
September 30, 2026, 4:11 pm
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை: 130க்கும் மேற்பட்ட கடைகள் பதிவு செய்யப்பட்டன
September 30, 2026, 3:58 pm
நாட்டின் பல மாநிலங்களில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை, சூரைக்காற்று வீசும்: மெட் மலேசியா எச்சரிக்கை
September 30, 2026, 3:44 pm
