நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்

ஜொகூர்பாரு:

ஜொகூரின் தற்காலிக சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில், மலேசிய கால்பந்து சங்கத்தின் நேர்மைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ அயோப் கானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜேடிதி அணியின் உரிமையாளராகவும் இருக்கும் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் எக்ஸ் பக்கத்தில் ஒரு சுருக்கமான ட்வீட் மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

மேலும், முன்னாள் போலிஸ் துணை தலைவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவேற்றினார்.

மலேசிய கால்பந்து சங்கத்தின்  நேர்மைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிட்சேவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக, 2025-2029 பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு அயோப் கானை நேர்மைக் குழுவின் தலைவராக நியமித்ததை மலேசிய கால்பந்து சங்கம் அறிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset