செய்திகள் விளையாட்டு
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
கோபன்ஹாகன்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறியுள்ளார்.
பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
அவர் ஒப்புக் கொண்ட சிறிது நேரத்திலேயே, 41 வயதான முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோபன்ஹேகனில் உள்ள அணியின் பயிற்சி முகாமை விட்டு எதிர்பாராத விதமாக வெளியேறினார்.
இதனால் போர்த்துகல் அணியுடனான அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது.
டென்மார்க்கிற்கு எதிரான போர்த்துகலின் தேசிய லீக் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக ரொனால்டோ முகாமை விட்டு வெளியேறினார்.
ஜீசஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ புரோன்காவுடனான உரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
அணி நிர்வாகியின் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகும், போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவருடன் கலந்தாலோசித்த பின்னரும், நான் தேசிய அணியின் பயிற்சி முகாமை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.
சரியான நேரத்தில், நான் எப்போதும் எனது முழு அர்ப்பணிப்பையும் அளித்து வந்த தேசிய அணியை விட்டு ஏன் வெளியேறுகிறேன் என்பது குறித்த உண்மையை அனைத்து போர்த்துகீசிய மக்களுக்கும் தெரிவிப்பேன் என்று ரொனால்டோ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
September 29, 2026, 11:09 am
இந்திய இளைஞர்கள் காற்பந்து துறையில் மிளிர வேண்டும்: டத்தோ K.இராஜகோபால் வலியுறுத்தல்
September 29, 2026, 10:24 am
போர்த்துகல் அணிக்காக தேவைப்பட்டால் மட்டுமே விளையாடுவேன்: ரொனால்டோ அதிரடி
September 29, 2026, 10:24 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 27, 2026, 10:49 pm
